சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 315 – எஸ்.கணேஷ்

10 அக்டோபர் 2017, 11:39 PM

மோகன்பாபு, மீனா, ரம்யா கிருஷ்­ணன் பிர­தான வேடங்­க­ளில் நடிக்க, கே.ராக­வேந்­தி­ர­ராவ் இயக்­கத்­தில் உரு­வான ‘ஆலரி மொகடு’ என்ற தெலுங்கு படத்­தின் தமிழ் பதிப்­பு­தான் ரஜி­னி­காந்த், மீனா, ரோஜா நடித்த ‘வீரா.’ 1994ம் ஆண்டு வெளி­வந்த இப்­ப­டத்தை பஞ்சு அரு­ணா­ச­லம் தயா­ரித்­தி­ருந்­தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்­கி­யி­ருந்­தார். இளை­ய­ராஜா இசை­ய­மைத்­தி­ருந்­தார்.

பாட்­டுப் போட்­டி­யில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்­டும் என்ற நோக்­கத்­தில் கிரா­மத்­தி­லி­ருந்து நக­ரத்­துக்கு வரு­கி­றார் ரஜி­னி­காந்த். நக­ரத்­தில் செந்­தி­லின் அறி­மு­கம் கிடைக்­கி­றது.

கிரா­மத்­தில் தன் தாய் வாங்­கி­யி­ருக்­கும் கடனை அடைப்­ப­தற்­கா­கவே தான் போட்­டி­யில் கலந்து கொள்ள வந்­தி­ருப்­ப­தாக செந்­தி­லி­டம் கூறும் ரஜினி, கிரா­மத்து பாட்டு வாத்­தி­யார் மகள் மீனாவை தான் உயி­ருக்­கு­யி­ராக காத­லிப்­ப­தை­யும் கூறு­கி­றார்.

பாட்­டுப் போட்­டி­யில் வெற்றி பெற்று மகிழ்ச்­சி­யு­டன் சொந்த ஊருக்கு வரும் ரஜி­னிக்கு அதிர்ச்சி காத்­தி­ருக்­கி­றது. திடீ­ரென வந்த வெள்­ளத்­தால் மீனா­வின் வீடு பலத்த சேத­ம­டைந்து பாட்டு வாத்­தி­யார் இறந்து விடு­கி­றார். மீனா­வின் பிரே­தம் கிடைக்­கா­த­தால் அவ­ரும் இறந்­தி­ருப்­பார் என எல்­லோ­ரும் நினைக்­கி­றார்­கள்.

தாயா­ரு­டன் நக­ரத்­துக்கு திரும்­பும் ரஜினி பல இடங்­க­ளி­லும் தனது பாடல் ஒலிப்­ப­தைப் பார்க்­கி­றார். பாடல் கேசட்­டு­களை வெளி­யி­டும் நிறு­வ­னத்­தின் முத­லாளி ஜன­க­ராஜ் மீண்­டும் ரஜி­னியை பாடு­வ­தற்கு அழைக்­கவே அந்த அழைப்பை ஏற்­றுக் கொள்­கி­றார் ரஜினி. ஜன­க­ரா­ஜின் மக­ளான ரோஜா ரஜி­னியை காத­லிக்­கி­றார். மீனாவை மறக்க முடி­யா­மல் இருக்­கும் ரஜினி ரோஜா­வின் காதலை நிரா­க­ரிக்­கி­றார்.

வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்ட மீனா உயிர் பிழைத்­தி­ருக்க வாய்ப்­பில்லை என்­றும், தான் இறப்­ப­தற்கு முன்பு தன் மகனை மணக்­கோ­லத்­தில் பார்க்க விரும்­பு­வ­தா­க­வும் கூறு­கி­றார் ரஜி­னி­யின் தாயார்.

எனவே, வேறு வழி­யின்றி ரோஜாவை மணந்து கொள்­கி­றார் ரஜினி. சிறிது காலத்­தில் வியா­பார நிமித்­த­மாக ரோஜா அமெ­ரிக்கா செல்­கி­றார். வெள்­ளத்­தின்­போது மீன­வர் ஒரு­வ­ரால் காப்­பாற்­றப்­பட்டு, பழைய நினை­வு­களை இழந்த மீனா­வுக்கு ரஜினி பாடிய பாட­லைக் கேட்ட பிறகு நினை­வு­கள் திரும்­பு­கின்­றன. எனவே நக­ரத்­துக்கு வந்த ரஜி­னியை சந்­திக்­கி­றார்.

மீனா­வைக் கண்டு மகிழ்ச்­சி­ய­டைந்­தா­லும் தனக்­குத் திரு­ம­ணம் நடந்­து­விட்ட விஷ­யத்தை அவ­ரி­டம் மறைத்து விடு­கி­றார் ரஜினி. மீனா தன்னை ரஜினி உட­ன­டி­யாக திரு­ம­ணம் செய்து கொள்ள வேண்­டும் என்று வற்­பு­றுத்­து­கி­றார். வேறு வழி­யின்றி ரஜினி மீனா­வை­யும் திரு­ம­ணம் செய்து கொள்­கி­றார்.

ஒரு­வ­ருக்­குத் தெரி­யா­மல் மற்­றொ­ரு­வ­ரு­டன் இரட்டை வாழ்க்கை நடத்­தும் ரஜினி படும் அவஸ்­தை­களை நகைச்­சு­வை­யுடன் விவ­ரிக்­கி­றது படத்­தின் பிற்­ப­குதி. விஷ­யம் வெளியே தெரிந்­த­தும், ரஜினி தனக்கு மட்­டுமே சொந்­த­மாக இருக்க வேண்­டும் என்று இரண்டு மனை­வி­க­ளும் ஆசைப்­ப­டு­கி­றார்­கள். இந்­தப் பிரச்னையை ரஜினி எப்­படி சமா­ளிக்­கி­றார் என்­ப­து­தான் படத்­தின் கிளை­மாக்ஸ். 1994ம் ஆண்டு மொத்­தம் 92 நேர­டி தமிழ் ப­டங்­க­ளும், நாற்­பத்­தைந்து மொழிமாற்­றம் செய்­யப்­பட்ட படங்­க­ளும் வெளி­வந்­தன. இவற்­றில் ‘அமை­திப்­படை’, ‘மக­ளிர் மட்­டும்’ ‘நாட்­டாமை’ ஆகிய படங்­கள் 175 நாட்­கள் ஓடிய படங்­க­ளா­கும். ‘காத­லன்’, ‘மகா­நதி’, ‘சீவ­லப்­பேரி பாண்டி’ ‘வீரா’ ஆகிய படங்­கள் நூறு நாட்­கள் ஓடிய படங்­க­ளா­கும்.